மேலும் செய்திகள்
விஜயதசமி தினத்தில் அரசு பள்ளிகளில் 66 பேர் சேர்க்கை
19 hour(s) ago
பொது விநியோக திட்ட பொருட்கள் முன்கூட்டியே விநியோகம்
19 hour(s) ago
மது பாட்டில் விற்றவர் கைது
21 hour(s) ago
சின்னசேலத்தில் கும்ப கலச பூஜை
22 hour(s) ago
திருக்கோவிலுார், : திருக்கோவிலுார் தொகுதியில் 'என் மண்; என் மக்கள்' யாத்திரைக்கு வந்த பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு கட்சி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.திருக்கோவிலுாரில் ஐந்து முனை சந்திப்பில் கட்சி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து யாத்திரை துவக்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பஸ் நிலையம் அருகே நடந்த பொதுக்கூட்ட மேடைக்கு வந்தார்.தொடர்ந்து நடந்த பொதுக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கலிவரதன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் முரளி வரவேற்றார். சுற்றுச்சூழல் பிரிவு தலைவர் ராதாகிருஷ்ணன் துவக்க உரையாற்றினார்.மாநிலத் தலைவர் அண்ணாமலை சிறப்புரையாற்றினார். துணைத் தலைவர் சம்பத், தரவு மேலாண்மை பிரிவு மாநிலச் செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட துணைத் தலைவர் வசந்தன், மகளிர் அணி மாவட்ட தலைவி பத்மா, பொருளாளர் பரணி, செயலாளர் புவனேஸ்வரி பேசினர்.செயற்குழு உறுப்பினர் ஏழுமலை, அரசு தொடர்பு செயலாளர் அழகேசன், ராயல் பாலாஜி, வழக்கறிஞர்கள் திருமால், சதீஷ்குமார், உமாசங்கர், சுற்றுச்சூழல் பிரிவு மாவட்ட துணைத் தலைவர் கோவிந்தன், நகர பொருளாளர் ரமேஷ், நிர்வாகிகள் மதன், சுமித்குமார், ஏழுமலை, விஜி, தினேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.நகர செயலாளர் பத்ரி நாராயணன் நன்றி கூறினார்.
19 hour(s) ago
19 hour(s) ago
21 hour(s) ago
22 hour(s) ago