உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  பஸ் ஸ்டாண்டில் இருக்கை அமைக்கப்படுமா?

 பஸ் ஸ்டாண்டில் இருக்கை அமைக்கப்படுமா?

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு பஸ் ஸ்டாண்டில் பயணிகள் அமருவதிற்கான இருக்கைகள் அமைக்க வேண்டும். கள்ளக்குறிச்சி அரசு பஸ்நிலையத்திற்கு நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வருகின்றனர். பஸ்சுக்காக பல மணி நேரம் காத்திருக்கின்றனர். பஸ் ஸ்டாண்டில் உள்ள இருக்கைகள் இல்லாததால், பயணிகள் அமர முடிவதில்லை. பஸ் ஸ்டாண்ட் கடைகளும் தங்கள் கடைக்கு முன்பு பல அடி துாரம் வரை ஆக்கிரமித்து பொருட்களை அடுக்கி வைத்து விடுகின்றனர். இதனால், பயணிகள் நிழலுக்கு கூட இடமின்றி சாலை யில் நிற்கும் நிலை உள்ளது. கர்ப்பிணிகள், முதியோர் கடும் சிரமப்படுகின்றனர். எனவே, பஸ் ஸ்டாண்டில் இருக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை