உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ரூ.382 கோடி சொத்து வரி வசூல்

ரூ.382 கோடி சொத்து வரி வசூல்

சென்னை:சென்னையில் ஒரு மாதத்தில், 382 கோடி ரூபாய் சொத்து வரி வசூலிக்கப்பட்டு உள்ளது.சென்னை மாநகராட்சி இந்த நிதியாண்டில், 1,750 கோடி ரூபாய் சொத்துவரி வசூலிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.ஒவ்வொரு நிதியாண்டின் முதல் அரையாண்டு துவங்கி, முதல் 30 நாட்களில் செலுத்துவோருக்கு, 5 சதவீதம் ஊக்கத்தொகை அதிகபட்சம் 5,000 ரூபாய் வரை வழங்கப்படுகிறது.அதன்படி, ஏப்., மற்றும் அக்., மாதம் துவங்கி, 30 நாட்களில் சொத்துவரி செலுத்துவோருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.சென்னை மாநகராட்சியில் நிதியாண்டு துவங்கி முதல் 30 நாட்களில், 370 கோடி ரூபாய் என, இதுவரை 382 கோடி ரூபாய் சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 5.52 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சொத்து வரியை செலுத்தி, ஊக்கத்தொகை பெற்றுள்ளனர். அதேநேரம் சென்னை மாநகராட்சியில், 13 லட்சத்திற்கும் மேற்பட்ட சொத்து உரிமையாளர்கள் உள்ள நிலையில், பலர் வரும் மாதங்களில் சொத்து வரி செலுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி