உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நீச்சல் பழகிய சிறுவன் பலி

நீச்சல் பழகிய சிறுவன் பலி

பள்ளிப்பட்டு : திருவள்ளூர் மாவட்டம்,. பள்ளிப்பட்டு அடுத்த, சாணாகுப்பத்தைச் சேர்ந்தவர் மகேஷ்பாபு மகன் சாகித், 10. ஆர்.கே.பேட்டை அருகே உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார்.நேற்று காலை, தன் விவசாய கிணற்றில் சாகித், நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். பிளாஸ்டிக் கேன் முதுகில் கட்டிக் கொண்டு பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது, பிளாஸ்டிக் கேன் தனியே பிரிந்து சென்றதால், சாகித் நீரில் மூழ்கினார்.இதுகுறித்து பள்ளிப்பட்டு தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், சாகித்தை சடலமாக மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை