உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஓவர்டேக் செய்த போது விபரீதம் மீடியனில் மோதிய கன்டெய்னர் லாரி

ஓவர்டேக் செய்த போது விபரீதம் மீடியனில் மோதிய கன்டெய்னர் லாரி

ஸ்ரீபெரும்புதுார்,:பெங்களூரில் இருந்து தொழிற்சாலைக்கு தேவையான ராட்சத இயத்திரத்தை ஏற்றிக்கொண்டு, நேற்று இரவு கன்டெய்னர் லாரி ஒன்று, ஸ்ரீபெரும்புதூர் வழியே மணலி சென்றது.ஸ்ரீபெரும்புதுார் -- குன்றத்துார் நெடுஞ்சாலையில், பட்டுநுால்சத்திரம் அருகே, முன்னால் சென்ற மற்றொரு லாரியை முந்தி செல்ல முயன்ற போது, எதிர்பாராத விதமாக சாலை நடுவே உள்ள மீடியனில் மோதியது.இதில், கன்டெய்னர் லாரியின் முன்பக்கம் முற்றிலும் நொறுங்கியது. லாரி ஓட்டுனரான வேலுாரைச் சேர்ந்த முருகன், 45, அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.இதனால், ஸ்ரீபெரும்புதுார் -- குன்றத்துார் சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். தகவல் அறிந்து வந்த ஸ்ரீபெரும்புதுார் போலீசார், விபத்தில் சிக்கிய கன்டெய்னர் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை