உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அரைகுறை பாதாள சாக்கடை பணியால் சாலை நடுவே ஆபத்தான பள்ளம்

அரைகுறை பாதாள சாக்கடை பணியால் சாலை நடுவே ஆபத்தான பள்ளம்

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து, குன்றத்துார் வழியாக போரூர் செல்லும் சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார், வல்லம் சிப்காட் தொழிற்பேட்டைகளில் இருந்து வரும் வாகனங்கள் அதிகமாக செல்லும் முக்கிய சாலையாக இந்த சாலை உள்ளது.இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதுார் பாதாள சாக்கடை திட்டத்திற்காக, பட்டுநுால்சத்திரம், கச்சிப்பட்டு பகுதிகளில், இந்த சாலையின் நடுவே பாதாள சாக்கடை குழாய் அமைக்கப்பபட்டது.அதன் பின், சாலையை சீரமைக்கவில்லை. சாலை நடுவே ஆபத்தான நிலையில் உள்ளதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருவது வாடிக்கையாகி வருகிறது.மேலும், சாலையில் நடுவே உள்ள பாதாள சாக்கடை 'மேன்ஹோல்' மூடி உடைந்து உள்ளதால், இருசக்கர வாகன ஓட்டிகள் அதில் விபத்தில் சிக்கி விழுந்து காயமடைகின்றனர்.எனவே, சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை