உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஜல்லி கற்கள் பெயர்ந்த சாலை

ஜல்லி கற்கள் பெயர்ந்த சாலை

சின்ன காஞ்சிபுரம், சதாவரம் சாலையில், மாவட்ட அரசு இசை பள்ளி, செவித்திறன் குறையுடையாருக்கான அரசு பள்ளி, பால்வளத் துறை அலுவலகம் உள்ளிட்டவை உள்ளதால், நடமாட்டம் நிறைந்த சாலையாக உள்ளது.மேலும், வரதராஜ பெருமாள் கோவில் பகுதியில் இருந்து, ஓரிக்கை மிலிட்டரி சாலை செல்வோர், சதாவரம் பிரதான சாலை வழியாக சென்று வருகின்றனர்.வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இச்சாலையில், 10 மீட்டர் நீளத்திற்கு மேல் சாலை சேதமடைந்து ஜல்லி கற்கள் பெயர்ந்த நிலையில் உள்ளது. இதனால், இருசக்கர வாகனங்கள் அடிக்கடி பஞ்சராகின்றன. எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எஸ்.முத்துகுமார்,காஞ்சிபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை