| ADDED : ஆக 09, 2024 09:57 PM
காஞ்சிபுரம்,: அய்யங்கார்குளம் கீழண்டை தெரு, ஒற்றைவாடை தெரு ஆகியவை குறுகலான தெருக்களாக உள்ளதால், உயர் மின்னழுத்தம் கொண்ட மின்தட பாதையை, மாற்று வழியில் எடுத்துச் செல்ல வேண்டும் என, சமூக ஆர்வலர் சிவகுமார் மனு அளித்துள்ளார்.இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட மேற் பார்வை பொறியாளருக்கு அனுப்பியுள்ள மனு விபரம்:காஞ்சிபுரம் ஒன்றியம், அய்யங்கார்குளம் கிராமத்தில் கீழண்டை தெரு, ஒற்றைவாடை தெரு ஆகியவை குறுகலான தெருக் களாக உள்ளன. இந்த தெரு வழியாக உயர் மின்னழுத்தம் மின்தட பாதைக்கான வழித்தடம் அமைக்கப்பட உள்ளதாக தெரிய வருகிறது.குறுகலான இத்தெருவில் உயர் மின்னழுத்தம் மின்தட பாதைக்கான மின் ஒயர் சென்றால், வீடுகளின் பக்கவாட்டில் எடுத்துச் செல்ல வேண்டும்.ஏற்கனவே இக்கிராமத்தில் நடைபெறும் மயான கொள்ளை, சோமவாரம், ஆருத்ரா தரிசனம், பொன்னியம்மன் கோவில் உற்சவம்என, திருவிழா நாட்களில் மின்தடை ஏற்படுத்தப்பட்ட பின்னரே சுவாமி வீதியுலா நடைபெறுகிறது.இத்தெரு வழியாக மின்தட பாதைக்கான மின்கம்பம் அமைத்தால், மக்களின் உயிருக்கு பாதிப்பு ஏற்படும்.இப்பகுதியில் மின்கம்பங்கள் அதிகம் உள்ளதால், கடந்த மாதம் லாரி மோதியதில் மின்கம்பிகள் அறுந்து விழுந்தன.எனவே, மாற்று வழியில் உயர் மின்னழுத்தம் மின்தட பாதை அமைக்க, திருவண்ணாமலை மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காவிட்டால், இப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து சாலை மறியலில் ஈடுபடுவோம்.இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.