உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தேசிய குழந்தைகள் விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு

தேசிய குழந்தைகள் விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு

காஞ்சிபுரம்:மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம், 'பால் புரஷ்கார்' விருது எனப்படும் பிரதம மந்திரி தேசிய குழந்தைகள் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த விருது வீரதீர மற்றும் தன்னலமற்ற செயல்கள் மற்றும் கல்வி, விளையாட்டு, கலை, பண்பாடு, சமூக சேவை, அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் சிறந்த சாதனைகள் செய்த குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.விருது பெறும் குழந்தைகளுக்கு பதக்கம், பாராட்டு சான்றிதழை குடியரசு தலைவர் வழங்குவார். இரண்டு ஆண்டுகளில் சாதனை படைத்த, 5 - 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடம் இருந்து, விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்புவோர், பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைச்சகத்தின், https://awards.gov.in என்ற வலைதளத்தில், ஜூலை 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை