உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலவாக்கம் ராஜகுளம் துார்வார கோரிக்கை

சாலவாக்கம் ராஜகுளம் துார்வார கோரிக்கை

உத்திரமேரூர் : உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது சாலவாக்கம்.இப்பகுதியில், ஊராட்சிக்கு சொந்தமான 5 ஏக்கர் பரப்பில் ராஜகுளம் உள்ளது. கால்நடைகளின் தாகம் தீர்த்தல் மற்றும் அப்பகுதியின் நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ள இந்த குளம், பல ஆண்டுகளாக துார்வாராமல் காணப்படுகிறது. இதனால், தாமரை செடிகள் படர்ந்துள்ளது.மேலும், குளத்தின் கரைப்பகுதிகளும் மழைக்காலங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு கரைந்துள்ளது. எனவே, சாலவாக்கம் ராஜகுளத்தை துார் வாருவதோடு, குளக்கரையில் சேதமான பகுதியில் கருங்கல் பதித்தும், குளத்தில் இறங்க படிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை