உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கட்டட கழிவுகளால் குழந்தைகளுக்கு ஆபத்து

கட்டட கழிவுகளால் குழந்தைகளுக்கு ஆபத்து

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, ஈஞ்சம்பாக்கம் ஊராட்சியில், கீழாண்டை தெருவில் அங்கன்வாடி மைய புது கட்டடம் உள்ளது. இந்த மையத்தில், 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் முன் பருவ கல்வி கற்கின்றனர்.இந்த மையத்திற்கு முன்பு, ஏற்கனவே இருந்த சேதமடைந்த கட்டடத்தின் செங்கல் கழிவுகளை அகற்றாமல், ஒரே இடத்தில் குவித்து வைத்து உள்ளனர். விளையாட்டு நேரங்களில், குழந்தைகள் விளையாடும் போது, செங்கல் கழிவுகளால் குழந்தைகளுக்கு காயம் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், விஷக்கடி பூச்சிகள் தங்கும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம், அங்கன்வாடி மைய கட்டடத்திற்கு முன்பு இருக்கும் கட்டடக் கழிவுகளை அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை