உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கணக்கீட்டு பிரிவு ஊழியர்கள் காஞ்சியில் ஆர்ப்பாட்டம்

கணக்கீட்டு பிரிவு ஊழியர்கள் காஞ்சியில் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம்:தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு, சி.ஐ.டி.யு., காஞ்சிபுரம் மின்திட்ட கிளை சார்பில் கணக்கீட்டு பிரிவு ஊழியர்களின் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி, காஞ்சிபுரம் ரயில்வே சாலையில், செயற்பொறியாளர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.காஞ்சிபுரம் மின்திட்ட கிளை தலைவர் மதியழகன் தலைமை வகித்தார். இதில், கணக்கீட்டு பிரிவில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். மொபைல் செயலி வாயிலாக கணக்கீட்டு பணி செய்ய மொபைல் போன் அல்லது டேப் வழங்க வேண்டும். மொபைல் டேட்டாவிற்கு மாதந்தோறும் 500 ரூபாய் வழங்க வேண்டும்.பல ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்ட கம்ப்யூட்டர், பிரிண்டர், கீ போர்டு, மவுஸ், ஹார்டு டிஸ்குகளை மாற்றி புதிதாக வழங்க வேண்டும்.மேலும், கணக்கீட்டு பிரிவு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பதவி உயர்வையும், இரு ஆண்டுகளாக நிறுத்தி வைத்துள்ள விருப்ப இடமாறுதல் உத்தரவையும் உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்