மேலும் செய்திகள்
ஊராட்சி செயலர் பணிக்கு கீழம்பியில் நாளை நேர்காணல்
23 hour(s) ago
10 ஊராட்சிகளில் நாளை சமூக தணிக்கை கிராம சபை
23 hour(s) ago
சாலையில் சுற்றி திரிந்த 4 மாடுகள் பிடிபட்டன
23 hour(s) ago
பொன்னேரி : காமராஜர் துறைமுகத்தின் வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு, சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ், பொன்னேரி அரசு கலைக்கல்லுாரியில் 5.25 கோடி ரூபாயில், புதிய வகுப்பறை கட்டடம் அமைக்கும் பணிகள் நடந்தன. தரை, முதல் மற்றும் இரண்டாவது என மூன்று தளங்களில், 18,480 சதுர அடியில், 15 வகுப்பறைகள் கொண்ட கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டன.இதன் திறப்பு விழா நேற்று, காமராஜர் துறைமுக மேலாண்மை இயக்குனர் ஐரீன் சிந்தியா தலைமையில் நடந்தது. காமராஜர் துறைமுகத்தின் தலைவர் சுனீல் பாலிவால், புதிய கட்டடத்தை திறந்து வைத்தார்.கல்லுாரி கட்டட திறப்பு விழாவிற்கு எம்.பி., - எம்.எல்.ஏ., உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளை அழைக்கவில்லை என்பதால், அவர்கள் அதிருப்தி அடைந்தனர்.இந்நிலையில், திறப்பு விழாவிற்கு வந்த துறைமுக தலைவரின் வாகனத்தை நிறுத்தி, பொன்னேரி காங்.,- எம்.எல்.ஏ., துரை சந்திரசேகர், தொண்டர்களுடன் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அவர்களை துறைமுக தலைவர் சுனீல் பாலிவால் சமாதானம் செய்ய முயன்றார்.காவல் துறையினர் அவர்களிடம் பேச்சு நடத்தி, வாகனத்திற்கு வழி ஏற்படுத்தினர். அதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் துறைமுக தலைவர் மற்றும் அதிகாரிகள் கட்டட திறப்பு விழாவிற்கு வந்தனர்.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பியதால், துறைமுக அதிகாரிகள் நிகழ்ச்சியை பாதியில் முடித்து சென்றனர்.
23 hour(s) ago
23 hour(s) ago
23 hour(s) ago