உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சேதமடைந்த மழைநீர் சேகரிப்பு தொட்டி

சேதமடைந்த மழைநீர் சேகரிப்பு தொட்டி

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலுக்கு சொந்தமான தெப்பகுளம் கோவில் அருகில் உள்ளது. பொய்கை ஆழ்வார் இக்குளத்தில் அவதரித்ததால் பொய்கை ஆழ்வார் குளம் என, அழைக்கப்படுகிறது.இக்குளம் பராமரிப்பு இல்லாமல் சீரழிந்த நிலையில் இருந்தது. இக்குளத்தை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இதையடுத்து சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் சார்பில், 17.8 லட்சம் ரூபாய் செலவில், 4,080 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட குளம் சீரமைக்கப்பட்டு கடந்த ஜூலை மாதம் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.இந்நிலையில்,குளத்தின் தென்மேற்கு திசையில் மழைநீர்சேகரிப்பு தொட்டியின் சிமென்ட் சிலாப் உடைந்த நிலையில் உள்ளது.இந்நிலையில்,அப்பகுதியினர் மழைநீர் சேகரிப்பு தொட்டியின் மீது குப்பையை கொட்டுவதால், குளத்திற்கு மழைநீர் செல்லும்போது, பிளாஸ்டிக் பாட்டில் உள்ளிட்ட குப்பை குவியல் குளத்திற்குள் செல்வதால், குளத்துநீரும், நிலத்தடிநீரும் மாசடையும் சூழல் உள்ளது.மேலும், 17.8 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்ட குளம்சீரழியும் நிலையில்உள்ளது.எனவே, குளத்தை ஒட்டியுள்ள மழைநீர் சேகரிப்பு தொட்டி மீது சிமென்ட் சிலாப் போட்டு மூடவும், குப்பை கழிவுகள் குளத்திற்கு செல்வதை தடுக்கவும், 'பில்டர்' அமைக்கவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைஎழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி