உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / இளையனார்வேலூர் முருகர் கோவிலில் பழுதடைந்த உயர் கோபுர மின்விளக்கு

இளையனார்வேலூர் முருகர் கோவிலில் பழுதடைந்த உயர் கோபுர மின்விளக்கு

வாலாஜாபாத்:வாலாஜாபாத் அடுத்த இளையனார் வேலூர் கிராமத்தில், பழமை வாய்ந்த பாலசுப்பிரமணியர் கோவில் உள்ளது. சுற்றுவட்டார கிராமத்தினர் மட்டுமின்றி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.சித்திரை மாத 10 நாட்கள் பிரம்மோற்சவம் விழா, வைகாசி மாதம் தேய்பிறை சஷ்டி, ஆவணியில் பவித்திர உற்சவம் என, ஆண்டு முழுதும் விழாக்கள் இக்கோவிலில் நடைபெறுகிறது.தொலைதூரத்தில் இருந்து வழிபாட்டுக்கு வரும் பக்தர்கள் இரவு நேரங்களில் தங்கி செல்வதையும் வழக்கத்தில் கொண்டுள்ளனர். இக்கோவிலில் ராஜகோபுரம் அருகே உயர்கோபுர மின்விளக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.இந்த உயர் மின்விளக்கு ஓராண்டாக பழுதடைந்து ஒளிராமல் உள்ளது. இதனால், இரவு நேரங்களில் கோவிலின் நுழைவாயில் பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது.எனவே, பழுதடைந்த உயர்கோபுர மின்விளக்குகளை சரிசெய்ய, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை