உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கருப்படிதட்டடை நுாலகம் தினமும் திறக்க வலியுறுத்தல்

கருப்படிதட்டடை நுாலகம் தினமும் திறக்க வலியுறுத்தல்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம்,பஞ்சுபேட்டையில், 3.10 லட்சம் ரூபாய் செலவில்கட்டப்பட்ட நுாலக கட்டடம், 2011ம் ஆண்டு, மார்ச் 1ல் திறக்கப்பட்டது.அப்பகுதிவாசிகள்தினசரி நாளிதழை வாசிக்கவும், பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் பொது அறிவை வளர்த்துக் கொள்ளவும், அரசு போட்டி தேர்வு எழுதுவோர் குறிப்புகள் எடுக்க நுாலகத்திற்கு வந்து செல்கின்றனர்.சில நாட்களாக நுாலகம் முறையாக திறக்கப்படுவதில்லை என, கிராமத்தினர் புகார் தெரிவிக்கின்றனர். வாரத்தில் நான்கு நாட்கள் திறந்தால், மூன்று நாட்களுக்கு நுாலகம் மூடியே கிடக்கிறது.இதனால், அப்பகுதிவாசிகள் நாளிதழ் வாயிலாக தினசரி நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்ள முடியாமலும், விடுமுறை நாட்களில், பள்ளி, கல்லுாரி மாணவ- - மாணவியர் பொழுதுபோக்கவும், தங்களது பொது அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ள இயலாத சூழல் உள்ளது.லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து கட்டப்பட்ட நுாலகமும், பல்வேறு தலைப்புகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள புத்தகங்களும் வீணாகி வருகிறது.எனவே, கருப்படிதட்டடை ஊராட்சியில் இயங்கும் நுாலகம் முறையாக இயங்க காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பஞ்சுபேட்டையினர் வலியுறுத்தி உள்ளனர்.இதுகுறித்து காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவர் கூறுகையில், ''கருப்படிதட்டடை ஊராட்சியில் இயங்கும் நுாலகத்திற்கு என, நுாலகர் நியமிக்கப்பட்டுள்ளார். எதற்காக மூடப்பட்டுள்ளது என, விசாரித்து, நுாலகம் முறையாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை