| ADDED : மே 11, 2024 11:24 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், கீழ்கதிர்பூரில்,நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால், 200 கோடி ரூபாய் செலவில் 2,112 வீடுகளுடன் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. வேகவதி ஆற்றில் இருந்த ஆக்கிரப்பு வீடுகள் அகற்றப்பட்டு, அங்கு வசித்தவர்களுக்கு மாற்றாக கீழ்கதிர்பூர் புதிய குடியிருப்பில் வீடு வழங்கப்பட்டுள்ளது.இங்கு 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்குடியிருப்பில் வெளியேறும் வீட்டு உபயோக கழிவுநீர் மற்றும் மழைநீர் வெளியேறும் வகையில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.இக்கால்வாயை முறையாக பராமரிக்காததால், கால்வாயில் கோரைப்புற்கள் புதர்போல மண்டியுள்ளது. இதனால், மழைக்காலத்தில் கால்வாய் வாயிலாக வெளியேற வேண்டிய மழைநீர் குடியிருப்பை சூழும் நிலை உள்ளது.எனவே, மழைநீர் கால்வாயில் மண்டி கிடக்கும் கோரைப் புற்களை அகற்றி, கால்வாயை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.