மேலும் செய்திகள்
சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம்
5 hour(s) ago
மின்விளக்கு வசதி இல்லாத கருங்குட்டை சுடுகாடு
5 hour(s) ago
அச்சிறுபாக்கம் : மேல்மருவத்துார் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம், 46, என்பவர், மனைவி மற்றும் இரண்டு வயது குழந்தையுடன், 'மாருதி சுசூகி' காரில், திருவண்ணாமலையில் இருந்து சென்னை நோக்கி வந்தார்.அப்போது, சென்னை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மேல்மருவத்துார் அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர மரத்தின் மீது மோதி, 10 அடி ஆழமுள்ள மழைநீர் செல்லும் கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.தகவலறிந்து விரைந்து சென்ற அச்சிறுபாக்கம் போலீசார், சிறிய காயங்களுடன் காரில் தவித்துக் கொண்டிருந்த கணவன் - மனைவி மற்றும் குழந்தையை மீட்டு, மேல்மருவத்துார் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, வழக்கு பதிந்து, போலீசார் விசாரிக்கின்றனர்.சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான கார். இடம்: மேல்மருவத்துார்.
தடுப்பு அமைக்க எதிர்பார்ப்புசென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், அச்சிறுபாக்கம் முதல் மேல்மருவத்துார் வரை, 3 கிலோமீட்டர் துாரத்திற்கு, சாலையோரத்தில் 10 அடி ஆழமுள்ள மழை நீர் செல்லும் கால்வாய் உள்ளது. மேலும், இப்பகுதியில் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகிறது. இதைத் தடுக்கும் விதமாக, சாலையோரத்தில் இரும்பு தடுப்புக் கம்பிகள் அமைக்க, தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
5 hour(s) ago
5 hour(s) ago