மேலும் செய்திகள்
சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம்
3 hour(s) ago
மின்விளக்கு வசதி இல்லாத கருங்குட்டை சுடுகாடு
3 hour(s) ago
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அருகே மணியாட்சி கிராமத்தில் கருவேல மர புதர்களில் மான்கள் கூட்டமாக உலா வருகின்றன.காஞ்சிபுரம் மாவட்டம்,உத்திரமேரூர் ஒன்றியம், மருதம் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் மட்டுமே, வனத்துறைக்கு சொந்தமான காப்பு காடுகள் உள்ளன. இந்த காப்பு காடுகளில் மான், மயில் உள்ளிட்ட வேட்டையாடுவதற்கு தடை செய்யப்பட்ட வன விலங்கினங்கள் வசித்து வருகின்றன.தற்போது, கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், வனத்துறை காப்பு காடுகளில் இருக்கும் விலங்குகள், அடர்ந்து வளர்ந்துள்ள கருவேல மர புதர்களில் அலைந்து திரிகிறது. குறிப்பாக, காஞ்சிபுரம் அடுத்த மூலப்பட்டு, மணியாட்சி ஆகிய பகுதிகளில் இருக்கும் மாந்தோப்புகள் மற்றும் கருவேல புதர்களில், மான்கள் கூட்டமாக திரிவதை காண முடிகிறது. இதை, நாய்கள் வேட்டையாடுவதற்கு முன், மான்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விலங்குகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
3 hour(s) ago
3 hour(s) ago