| ADDED : ஆக 20, 2024 08:17 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் நகர்ப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது.மலேரியா, டெங்கு, யானைக்கால் நோய் உள்ளிட்ட பிரச்னைகள் கொசுவால் ஏற்படுகிறது. குறிப்பாக, காஞ்சிபுரம் நகரில் 'டெங்கு' காய்ச்சலால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.வீட்டின் தண்ணீர் தொட்டி, உடைந்த பொருட்கள், மாவு அரைக்கும் கல் உள்ளிட்டவைகளில் டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் 'ஏடிஎஸ்' கொசு வளர்கிறது. இதனால், மாநகராட்சி முழுதும், கொசு மருந்து அடிக்க நகரவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.'கொசு வளர்வதற்கான சூழலை ஏற்படுத்துவோருக்கு அபராதம் விதிக்கப்படும்' என, மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்து வருகிறது. இந்நிலையில், கொசு உற்பத்தி அதிகரித்துள்ளதால், நகரின் அனைத்து பகுதிகளிலும் மாலை மற்றும் இரவு வேளைகளில், மாநகராட்சி ஊழியர்கள் கொசு மருந்து அடிப்பதை தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.