உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சேதமடைந்த மின்கம்பம் மாற்ற வலியுறுத்தல்

சேதமடைந்த மின்கம்பம் மாற்ற வலியுறுத்தல்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில் தீயணைப்பு நிலையம், கருவூலம், பி.எஸ்.என்.எல்., அலுவலகம், நீதிமன்றம், பொதுப்பணித்துறை, போக்குவரத்து காவல் நிலையம் என, பல்வேறு அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்த அலுவலகங்களுக்கு மின்கம்பங்கள் வாயிலாக மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளன.இதில், தாலுகா அலுவலகத்தின் தென்மேற்கு பகுதியில் உள்ள கட்டண கழிப்பறை கட்டடம் அருகில் உள்ள ஒரு மின்கம்பத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதோடு, சிமென்ட் காரை உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் உள்ளது. பலத்த காற்று வீசினால், மின்கம்பம் நொறுங்கி விழுந்து மின்விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, சேதமடைந்த பழைய மின்கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை