மாமல்லபுரம் : கலை, பண்பாட்டுத் துறையின்கீழ், அரசு கட்டடம் மற்றும் சிற்பக்கலைக் கல்லுாரி, மாமல்லபுரத்தில் இயங்குகிறது. தமிழ்நாடு இசை, கவின்கலை பல்கலைக்கழகத்துடன் இணைந்தது.தொழில்நுட்பவியல் இளநிலையில், மரபு கட்டடக் கலை - பி.டெக்., மரபு சிற்பக்கலை - பி.எப்.ஏ., மரபு ஓவியம் மற்றும் வண்ணக்கலை ஆகிய படிப்புகள் நான்காண்டுகள் பட்டம் பயிற்றுவிக்கப்படுகின்றன.இந்தாண்டுக்கான. 2024 - 25 மாணவ - மாணவியர் சேர்க்கைக்கு, இணையவழியில் விண்ணப்பம் பெறப்படுவதாக, கலை, பண்பாட்டுத் துறை அறிவித்துள்ளது.பி.டெக்., படிப்பிற்கு, பிளஸ் 2 கணித பாடத்துடன் தேர்ச்சி அல்லது அதற்கு இணையான பாடத்திட்டத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மரபு சிற்பக் கலைகள், ஓவியம் மற்றும் வண்ணம் படிப்புகளுக்கு, பிளஸ் 2 தேர்ச்சி அல்லது அதற்கு இணையான பாடத்திட்டத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.விண்ணப்பதாரர், 2024, ஜூலை 1ல், ஆதிதிராவிடர், பழங்குடியினர் எனில், 26 வயது, பிற வகுப்பினர் எனில், 23 வயது நிறைவு பெற்றிருக்க கூடாது.இணைய வழி விண்ணப்ப பதிவு, தற்போது துவக்கப்பட்டுள்ளது. பதிவுக்கு கட்டணம் செலுத்திய பின், www.artandculture.tn.gov.inஎன்ற இணையதளத்தில், சான்றிதழ் ஆவணங்கள், கட்டணம் செலுத்திய ரசீது ஆகியவற்றுடன் பதிவேற்றி, ஜூன் 30 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு, 044 - 2744 2261 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.