உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலையோரம் குப்பை எரிப்பு வாகன ஓட்டிகள் அவதி

சாலையோரம் குப்பை எரிப்பு வாகன ஓட்டிகள் அவதி

ஏனாத்துார்: வாலாஜாபாத் ஒன்றியம், ஏனாத்துாரில் இருந்து, நல்லுார், தர்மநாயக்கன்பட்டரை வழியாக வையாவூர், காஞ்சிபுரம் செல்லும் சாலை உள்ளது. இதில், ஏனாத்துார் எல்லை பகுதியில் கொட்டப்படும் குப்பை, தீயிட்டு எரிக்கப்படுகிறது.எரியும் குப்பையில் இருந்து வெளியேறும் புகையால், அவ்வழியாக செல்லும் பாதசாரிகளுக்கும், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும் கண் எரிச்சல், சுவாச கோளாறு ஏற்படும் சூழல் உள்ளது.எனவே, ஏனாத்துாரில் சாலையோரம் குப்பை கொட்டுவோர் மீதும், தீயிட்டு எரிப்போர் மீதும் சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை