உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அரசு தலைமை மருத்துவமனையில் தேசிய தரமதிப்பீட்டு குழு ஆய்வு

அரசு தலைமை மருத்துவமனையில் தேசிய தரமதிப்பீட்டு குழு ஆய்வு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் குழந்தைகள் புறநோயாளிகள் பிரிவு, குழந்தைகள் உள்நோயாளிகள் பிரிவு, குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவுகள் உள்ளன.தேசிய தர மதிப்பீட்டு குழு உறுப்பினர்களான, ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்ட நோடல் அலுவலர் டாக்டர் சைதன்யா, கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்ட சுகாதார பணிகள் உதவி இயக்குனர் டாக்டர் ஜித்தேஷ் உள்ளிட்ட தர மதிப்பீட்டு குழுவினர் நேற்று ஆய்வு செய்து, தர மதிப்பீட்டு பணியை மேற்கொண்டனர்.ஆய்வின்போது, காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் கோபிநாத், அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் மருத்துவர்கள் உடனிருந்தனர்.தேசிய தர மதிப்பீட்டு ஆய்வுக்குழுவால் மதிப்பீட்டு அறிக்கை தயார் செய்யப்பட்டு, மத்திய அரசிடம் சமர்பித்தவுடன், காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்றிதழ் வழங்கப்படும்.அவ்வாறு தரச்சான்று வழங்கப்படும் பட்சத்தில், இம்மருத்துவமனைக்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு கிடைக்கும். இந்நிதி மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவுகளை மேம்படுத்த பயனுள்ளதாக அமையும் என, காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி