உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கோடை விடுமுறையை கழிக்க சுற்றுலா கிளம்பிய மக்கள்

கோடை விடுமுறையை கழிக்க சுற்றுலா கிளம்பிய மக்கள்

தாம்பரம்:பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதை அடுத்து, வெயிலையும் பொருட்படுத்தாமல், சுற்றுலாத்தலங்களுக்கு செல்லும் மக்களால், தாம்பரத்தில் பேருந்துகளில் கூட்டம் அலைமோதுகிறது.பள்ளிகளில் தேர்வு முடிந்து, கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதையடுத்து, கோடை விடுமுறையை கழிக்க, குடும்பத்தினருடன் கோவில், சுற்றுலாத்தலங்களுக்கு செல்வது அதிகரித்து விட்டது. மெரினா கடற்கரை, வண்டலுார் உயிரியல் பூங்கா, கிண்டி பூங்கா, மகாபலிபுரம், முதலை பண்ணை, கோவளம் உள்ளிட்ட இடங்களுக்கு தினசரி, ஏராளமானோர் ரயில், பேருந்து, கார் உள்ளிட்ட வாகனங்களில் சென்று வருகின்றனர்.அந்த வகையில், தாம்பரத்தில் இருந்து வெயிலையும் பொருட்படுத்தாமல் திருப்போரூர், வண்டலுார், மகாபலிபுரம் செல்லும் பேருந்துகளில், ஒவ்வொரு நாளும் கூட்டம் அலை மோதுகிறது. இந்த வகையில் நேற்று அதிகமானோர், பேருந்துகளில் பயணித்து, சுற்றுலாத்தலங்களுக்கு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை