உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கோடை விடுமுறையிலும் இயங்கும் தனியார் பள்ளிகள்

கோடை விடுமுறையிலும் இயங்கும் தனியார் பள்ளிகள்

காஞ்சிபுரம்:தமிழகம் முழுதும் பள்ளி, கல்லுாரிகளுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கோடையில் பள்ளி மாணவர்களை, சிறப்பு வகுப்பு என்ற பெயரில் பள்ளிக்கு வரவழைக்க கூடாது என. கல்வித்துறை அதிகாரிகள் பலமுறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர். இருப்பினும், கோடை விடுமுறையில் பள்ளிகள் நடத்துவது சில தனியார் பள்ளிகள் வாடிக்கையாக வைத்துள்ளது. அந்த வகையில், காஞ்சிபுரம் நகரில் சில பள்ளிகளில் கோடை விடுமுறையிலும், பிளஸ் 2, 10ம் வகுப்புக்கான சிறப்பு வகுப்புகள் நடைபெறுவதாக புகார் எழுந்துளள்து.குறிப்பாக, காஞ்சிபுரம் நகரில் உள்ள ஏகாம்பரநாதர் கோவிலை சுற்றியுள்ள பள்ளிகளில், சிறப்பு வகுப்புகள் நடப்பதாக புகார் எழுந்துள்ளது.கோடை விடுமுறையிலும், மாணவர்களை பள்ளிக்கு அழைப்பது குறித்து பல்வேறு தரப்பினரும் புகார் தெரிவிக்கின்றனர். கல்வித்துறையில், தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலர், இதற்கான ஆய்வு பணிகள் மேற்கொண்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை