உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தேர்தல் செலவின பார்வையாளர்கள் வருகை தொடர்பு கொள்ள மொபைல் எண் வெளியீடு

தேர்தல் செலவின பார்வையாளர்கள் வருகை தொடர்பு கொள்ள மொபைல் எண் வெளியீடு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதிக்கு தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.காஞ்சிபுரம் தொகுதிக்கு, மதுக்கர் ஆவேஸ் என்பவரும், ஸ்ரீபெரும்புதுார் தொகுதிக்கு சந்தோஷ்சரண் என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.காஞ்சிபுரம் பார்வையாளரை 72005 55395 என்ற எண்ணிலும், ஸ்ரீபெரும்புதுார் பார்வையாளரை 99403 53325 என்ற எண்ணிலும் பொதுமக்கள், அரசியல் கட்சியினர் தொடர்பு கொள்ளலாம்.இருவரும், காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று காலை வந்தனர். தேர்தல் சம்பந்தமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, கலெக்டர் கலைச்செல்வியிடம் கேட்டறிந்தனர்.இதைத் தொடர்ந்து, கலெக்டர் அலுவலகத்தின் மூன்றாவது மாடியில் இயங்கும், கட்டுப்பாட்டு அறை மற்றும் மீடியா சென்டர் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். கட்டுப்பாட்டு அறைக்கு வந்த புகார்கள் பற்றியும், சமூக வலைதலங்களை கண்காணிப்பது பற்றியும், அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.இதைத் தொடர்ந்து, கலெக்டர் வளாக கூட்டரங்கில், இரு செலவின பார்வையாளர்கள் தலைமையில், தேர்தல் செலவின குழுவினருடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.இதையடுத்து, இரு செலவின பார்வையாளர்களும் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது:வாக்காளர்கள் தைரியமாக ஓட்டளிக்க வேண்டும். எந்த புகாராக இருந்தாலும் என்னிடம் புகார் அளிக்கலாம். வாக்காளர்கள் தேர்தல் சம்பந்தமான புகார்களை 'சி -விஜில்' மொபைல் ஆப் மூலம் தெரிவிக்கலாம்.எங்கள் இருவரின் மொபைல் எண்களிலும் வாக்காளர்கள் புகார்களை பதிவு செய்யலாம். பறக்கும் படையினர், கண்காணிப்பு குழுவினர், வாகனங்களை கண்காணித்து, கணக்கில் வராத பொருட்களை பறிமுதல் செய்ய வேண்டும்.பறிமுதல் செய்யப்பட்ட பணம், பொருட்களை மீண்டும் பெற, கலெக்டர் தலைமையிலான குழு மூலம் ஆய்வு செய்த பின், திருப்பி ஒப்படைக்கப்படும். வேட்பாளர் அறிமுக கூட்டங்களில் உணவு பறிமாறினால், வேட்பாளர் செலவில் கணக்கில் எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை