உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ரேஷன் கடை கட்டட கூரையில் வளர்ந்துள்ள அரசமர செடிகள்

ரேஷன் கடை கட்டட கூரையில் வளர்ந்துள்ள அரசமர செடிகள்

காஞ்சிபுரம்:வாலாஜாபாத் ஒன்றியம், முத்தியால்பேட்டையில் செயல்படும், ரேஷன் கடையில், 978 கார்டுதாரர்களுக்கு கார்டின் தன்மைக்கேற்ப அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.இக்கட்டடத்தை முறையாக பராமரிக்காததால், கட்டடத்தின் கூரையில் இரு இடங்களில் அரசமர செடிகள் வளர்ந்துஉள்ளன. இச்செடிகள் வேரூன்றி வளர்வதால், சுவரில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. நாளடைவில், ரேஷன் கடை கட்டடம் முழுதும் வலுவிழுக்கும் சூழல் உள்ளது.எனவே, ரேஷன் கடை கூரையில் செழித்து வளர்ந்து வரும் அரச மரச்செடிகளை வேருடன்அகற்றி, விரிசல் ஏற்பட்டுள்ள பகுதியை சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி