உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாந்தாலீஸ்வரர் கோவில் தெருவில் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

சாந்தாலீஸ்வரர் கோவில் தெருவில் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, சாந்தாலீஸ்வரர் கோவில் தெருவில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, 10 நாட்களுக்கு மேலாக சாலையில் கழிவுநீர் வழிந்தோடுகிறது.நாட்கணக்கில் தேங்கும் கழிவுநீர் பாசி படர்ந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால், அப்பகுதியினர் வீட்டில் அமர்ந்து சாப்பிட முடியவில்லை என, புகார் தெரிவிக்கின்றனர்.வீட்டு வாசலில் தேங்கும் கழிவுநீரால், அப்பகுதியினர் மட்டுமின்றி பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ - -மாணவியர், கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. வேகமாக செல்லும் வாகனங்களால் கழிவுநீர் தெளிப்பதால் பாதசாரிகள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.தொடர்ந்து வெளியேறும் கழிவுநீரால், சாந்தாலீஸ்வரர் கோவில் தெருவில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. இப்பகுதியில் அடிக்கடி பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்படுவதால், அடைப்பை முழுதும் நீக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை