உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சியில் சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

காஞ்சியில் சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் மாநகராட்சி பாண்டவ பெருமாள் சன்னிதி தெருவில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் கோவில், வணிக வளாகம் உள்ளிட்டவை உள்ளன. இத்தெருவில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, மேன்ஹோலில் இருந்து வெளியேறும் கழிவுநீர், மேற்கு ராஜ வீதி வரை வழிந்தோடி வருகிறது.இச்சாலை வழியாக சங்கர மடம், பாண்டவ பெருமாள் கோவில், இரட்டை பிள்ளயைார்கோவில், குமரகோட்டம் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு நடந்து செல்லும் பக்தர்கள் முகம் சுளித்தபடி கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது.வேகமாக செல்லும் வாகனங்களால், ஆடைகளில் கழிவுநீர் தெளிப்பதால் பாதசாரிகள் மனஉளச்சலுக்கு ஆளாகின்றனர். தொடர்ந்து வெளியேறும் கழிவுநீரால், இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.எனவே, பாண்டவ பெருமாள் சன்னிதி தெருவில், பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை முழுதும் நீக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை