உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / * படம் மட்டும் காவலான்கேட் அங்காளம்மனுக்கு சாந்தி அபிேஷக விழா விமரிசை

* படம் மட்டும் காவலான்கேட் அங்காளம்மனுக்கு சாந்தி அபிேஷக விழா விமரிசை

காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் காவலான்கேட், அறம்வளத்தீஸ்வரர் கோவில் தெரு, ஓம்ஸ்ரீ அங்காளம்மன் கோவில் சாந்தி அபிேஷக விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி நேற்று காலை பால்குட ஊர்வலம் நடந்தது. தொடந்து அம்மனுக்கு சிறப்பு அபிேஷக அலங்காரமும், மஹாதீப ஆராதனையும் நடந்தது.மாலை 6:00 மணிக்கு அம்மனுக்கு சந்தன காப்புஅலங்காரமும், தொடர்ந்து, திருவிளக்கு பூஜையும் நடந்தது. ஜையில் பங்கேற்ற பெண்கள் குத்து விளக்கேற்றி, விநாயகர், துர்கா, லட்சுமி, சரஸ்வதியை ஆவாஹனம் செய்து, 1008 லலிதா சகஸ்ரநாம பூஜை செய்தனர். பூஜையில் பங்கேற்ற பெண்களுக்கும், பக்தர்களுக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.விழாவிற்கான ஏற்பாடப்டை ஓம் ஸ்ரீ அங்காளம்மன் சாந்தி அபிேஷக விழா குழுவினர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட பம்பை, உடுக்கை, காவடி கைச்சிலம்பாட்ட கலைஞர்கள் சங்கத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை