காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அரசு இசைப்பள்ளி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:தமிழக அரசு கலை பண்பாட்டு துறையில், காஞ்சிபுரம் மாவட்ட அரசு இசைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் குரலிசை, நாதஸ்வரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய பிரிவுகளுக்கு, மூன்றாண்டு சான்றிதழ் பயிற்சி அளிக்கப்படுகிறது.பயிற்சி வகுப்புகள், காலை 10:00 மணி முதல், மாலை 4:00 மணி வரை நடைபெற உள்ளது. இதில், 12 - 25 வயது வரை இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.மூன்று ஆண்டு பயிற்சி முடிவில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படுகிறது. பயிற்சியில் சேரும் மாணவ -- மாணவியருக்கு, இலவச பேருந்து பயண சலுகை; சைக்கிள் மற்றும் அனைத்து தரப்பினருக்கும், 400 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. 2024- - 25ம் கல்வியாண்டுக்கான சேர்க்கை, நடைபெறுகிறது.காஞ்சிபுரம் மாவட்டத்தில், 8ம் வகுப்பு, பத்தாம் மற்றும் பிளஸ் 2 வகுப்பு தேர்ச்சி பெற்ற அல்லது தேர்ச்சி தவறிய இசை ஆர்வம் உள்ள மாணவர்கள் சேரலாம்.இசைப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இசை ஆசிரியராக பணிபுரியவும், நாதஸ்வரம், தவில், தேவாரம் பயின்ற மாணவர்கள், ஹிந்து சமய அறநிலையத் துறை கோவில்களில் பணிபுரியவும், வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்.இசை பள்ளியில் சேர, ரமணி, தலைமை ஆசிரியை, மாவட்ட அரசு இசைப் பள்ளி, சதாவரம், ஓரிக்கை அஞ்சல், காஞ்சிபுரம் - 631 502 எனும் முகவரியில் விண்ணப்பங்களை நேரில் பெற்றுக் கொள்ளலாம்.விபரங்களுக்கு, 044 - 2726 8190, 94425 72948 என்ற எண்களில் தொடர்புக் கொள்ளலாம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.