உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வாலிபரை கத்தியால் குத்தி மொபைல், ரூ.10,000 பறிப்பு

வாலிபரை கத்தியால் குத்தி மொபைல், ரூ.10,000 பறிப்பு

திருப்போரூர் : சோழிங்கநல்லுார், குளக்கரை தெருவை சேர்ந்தவர் சுரேஷ், 24. சாக்லேட்டுகளை கடைகளுக்கு சப்ளை செய்யும் வேலை செய்கிறார்.நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு, சுரேஷ் வேலை முடிந்து, தாழம்பூர் டி.எல்.எப்., சாலை வழியாக பைக்கில் வீட்டிற்கு சென்ற போது, சிறுநீர் கழிக்க சாலை ஓரம் பைக்கை நிறுத்திவிட்டு இறங்கியுள்ளார்.அப்போது, அந்த வழியாக வந்த மூன்று மர்ம நபர்கள், கத்தியை காட்டி சுரேஷை மிரட்டினர். உடனே, அவர் அங்கிருந்து தப்பியோட முயற்சித்துள்ளார்.அவரை விரட்டிய மர்மநபர்கள், முட்புதர் பகுதியில் மடக்கிப்பிடித்து, கழுத்து மற்றும் வயிற்று பகுதியில் கத்தியால் குத்தி, அவரிடம் இருந்த மொபைல் போன் மற்றும் 10,000 ரூபாய் பணத்தை பறித்துக்கொண்டு தப்பினர்.படுகாயத்துடன் மயங்கிய சுரேஷ், நேற்று அதிகாலை 3:45 மணிக்கு, மயக்கம் தெளிந்து, தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார்.உடனே, சம்பவ இடத்திற்கு வந்த உறவினர்கள், சுரேஷை மீட்டு, கேளம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின்படி, தாழம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, மர்மநபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை