உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வரதராஜ பெருமாள் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது

வரதராஜ பெருமாள் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும், வைகாசி பிரம்மோற்சவம், 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும். அதன்படி, நடப்பு ஆண்டுக்கான பிரம்மோற்சவம் நேற்று அதிகாலை கொடியேற்றத்துடன் துவங்கியது.இதில், 2:30 மணிக்கு மேல் 3:45 மணிக்குள் கோவில் கொடிமரத்திற்கு பல்வேறு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, மங்கல வாத்தியங்கள் ஒலிக்க கருடாழ்வார் படம் இடம்பெற்ற கொடி, கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.அதை தொடர்ந்து, ஸ்ரீதேவி, பூதேவியுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள் வீதியுலா வந்தார். மாலை சிம்ம வாகன உற்சவம் நடந்தது.மூன்றாள் நாள் கருடசேவை உற்சவம் நடக்கிறது. இதில் அதிகாலை 4:00 மணிக்கு கோபுர தரிசனம் நடக்கிறது. ஏழாம் நாள் உற்சவமாக வரும் 26ம் தேதி, தேரோட்டமும், 29ம் தேதி தீர்த்தவாரியும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி