மேலும் செய்திகள்
சிறுபாலம் இல்லாததால் சகதியான தொள்ளாழி சாலை
1 hour(s) ago
முருகன் கோவில் உண்டியல் வருவாய் ரூ.24.87 லட்சம்
2 hour(s) ago
பால தர்மசாஸ்தா கோவிலில் கொடியேற்றத்துடன் விழா துவக்கம்
2 hour(s) ago
காஞ்சிபுரம், தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஏப்., 19ல் நடக்கிறது. இதையொட்டி காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தலுக்கான பணிகள் நடந்து வருகின்றன. இதில், ஒரு பகுதியாக தேர்தல் நாளன்று, காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 303 ஓட்டுச்சாவடிகளில் பணிபுரிய உள்ள ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர், ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி முகாம் காஞ்சிபுரம் எஸ்.எஸ்.கே.வி., பள்ளியில் நேற்று நடந்தது.இதில், ஓட்டுப்பதிவில் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், ஓட்டுப்பதிவு முடிந்தபின் செய்ய வேண்டிய பல்வேறு பணிகள் குறித்தும், ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு மண்டல அலுவலர்கள் பயிற்சி அளித்தனர்.தேர்தல் பயிற்சி முகாம் நடந்த வளாகத்தில் முதன் முறையாக சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு இருந்தது. தேர்தல் பயிற்சி முகாமில் பங்கேற்ற தேர்தல் அலுவலர்களுக்கு திடீரென உடல் சுகவீனம் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவ சிகிச்சையளித்து, மருந்து, மாத்திரை வழங்க, எஸ்.எஸ்.கே.வி., பள்ளி வளாகத்தில், காஞ்சிபுரம் மாநகராட்சி, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தைச் சேர்ந்த மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் இருந்தனர்.மேலும், அவசர சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல 108 அவசரகால ஆம்புலன்ஸ் சேவை வாகனமும் மற்றும் தீயணைப்பு வாகனமும் தயார் நிலையில் இருந்தது.உடல் சுகவீனம் ஏற்பட்ட தேர்தல் அலுவலர்கள் மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்றனர். தேர்தல் பயிற்சி முகாம் மற்றும் சிறப்பு மருத்துவ முகாமை காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் ஆய்வு செய்தார்.
1 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago