உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஜாக்கி மூலம் 8 அடி உயர்த்தப்படும் வியாசர்பாடி ரவீஸ்வரர் கோவில்

ஜாக்கி மூலம் 8 அடி உயர்த்தப்படும் வியாசர்பாடி ரவீஸ்வரர் கோவில்

சென்னை:சென்னை, வியாசர்பாடியில், 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த தொன்மையான ரவீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பல ஆண்டுகளுக்கு முன் வரை சூரியன் கதிர்கள் ராஜகோபுரம் வழியாக நுழைந்து மூலவர் மீது படும். தற்போது கோவில் சன்னிதி, 5 அடி கீழே இறங்கியதால், சூரிய ஒளி கதிர்கள் செங்குத்தாக விழும் மாதங்களில் மட்டும் மூலவர் மீது படுகிறது. கோவில் இறங்கியதால், மழை காலங்களில் 5 அடிவரை மழைநீர் தேங்கி நிற்கிறது. தற்போது கோவில் மூலவர், அம்மன், மகாமண்டபம், நந்தி, கொடிமரம், சண்டிக்கேஸ்வரர், ராஜகோபுரம் ஆகிய சன்னிதிகள் தரைதளத்தை விட, 5 அடி பள்ளத்தில் உள்ளதால் சன்னிதிகளை ஜாக்கி உதவியுடன் உயர்த்த பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கான பணிகளை ஹிந்து சமய அறநிலையத் துறை மேற்கொள்ள உள்ளது.இப்பணி குறித்த விபரங்களை இக்கோவிலில் நேற்று பணிகளை பார்வையிட்டு, ஹிந்து சமய அறநிலைத் துறை அமைச்சர் சேகர்பாபு கேட்டறிந்தார். வியாசர்பாடி, மூர்த்திங்கர் தெருவில் உள்ள கோவிலுக்கு சொந்தமான திருமண மண்டபத்தை, 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கும் பணி, 90 லட்ச ரூபாய் செலவில் கோவில் குளத்தில் 12 அடியில் சுற்றுச்சுவர்கள் அமைக்கும் பணி, குளத்தை சுற்றி பாதை, மின்விளக்கு வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன.இப்பணிகளையும் அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டார். அறநிலையத்துறை இணை ஆணையர் முல்லை, கோவில் செயல் அலுவலர் ஆட்சி சிவப்பிரகாசம், மேலாளர் தனசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை