மேலும் செய்திகள்
செடிகளால் குடிநீர் தொட்டி வலுவிழக்கும் அபாயம்
19 hour(s) ago
கிளக்காடி ஏரிக்கால்வாயில் சிறுபாலமின்றி விவசாயிகள் அவதி
19 hour(s) ago
பூந்தமல்லி:செம்பரம்பாக்கம் ஏரிக்கரையின் கீழ் உள்ள மண் சாலையை, தார் சாலையாக அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.சென்னையின் குடிநீர் ஆதாரமாக, செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் கரை, பூந்தமல்லி அருகே மேப்பூர் முதல் குன்றத்துார் அருகே நந்தம்பாக்கம் வரை, 8 கி.மீ., துாரத்திற்கு அமைந்துள்ளது. இந்த கரைக்கு கீழ், மண் சாலை உள்ளது. இந்த சாலை வழியே செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நீரேற்றும் நிலையம், பொதுப்பணி துறை அலுவலகம், குன்றத்துார், சிறுகளத்துார் பகுதிகளுக்குச் செல்ல முடியும். பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த சாலை, பராமரிப்பின்றி உள்ளது. மேம்பூர் முதல் குன்றத்துார் வரை இந்த சாலையை சீரமைத்து தார்ச்சாலையாக அமைத்தால் குன்றத்துார், சிறுகளத்துார், மேப்பூர், செம்பரம்பாக்கம், நசரத்பேட்டை பகுதிகளுக்கு, வாகன ஓட்டிகள் எளிதாக செல்ல முடியும்.எனவே, இந்த சாலையை தார்ச்சாலையாக அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
19 hour(s) ago
19 hour(s) ago