உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மனை வரன்முறை செய்ய சிறப்பு முகாம் தேவை

மனை வரன்முறை செய்ய சிறப்பு முகாம் தேவை

குன்றத்துார்:தமிழகத்தில், அங்கீகாரமில்லாத மனைகள் விற்க தடை உள்ளது. அங்கீகரிக்கப்படாத மனைகளை, அங்கீகாரம் செய்து கொள்ள பிப்., 29ம் தேதி வரை, வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை கால அவகாசம் வழங்கி அறிவித்துள்ளது. கால அவகாசம் முடிவடைய இன்னும் சில தினங்களே உள்ளன.இந்நிலையில், சென்னை புறநகரை ஒட்டியுள்ள குன்றத்துார் ஒன்றியத்தில், மனை வரன்முறை சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.அய்யப்பன்தாங்கல் நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு சங்கம் ரவிசந்திரன் கூறுகையில், ''அங்கீகாரம் இல்லாத மனைகளை அங்கீகாரம் செய்ய மக்கள் விரும்பும் நிலையில், ஏழ்மை நிலை மக்கள் பலர், விண்ணப்பிக்க தெரியாமல் சிரமப்படுகின்றனர்.''எனவே, குன்றத்துார் ஒன்றியத்தில் அய்யப்பன்தாங்கல், பரணிபுத்துார் உள்ளிட்ட ஊராட்சி பகுதியில் மனை வரன்முறை சிறப்பு முகாம் நடத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை