உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஆடிப்பூரம் விழா; உத்திரமேரூர்  துர்க்கை  அம்மனுக்கு 501 பால்குட  ஊர்வலம்

ஆடிப்பூரம் விழா; உத்திரமேரூர்  துர்க்கை  அம்மனுக்கு 501 பால்குட  ஊர்வலம்

உத்திரமேரூர், :உத்திரமேரூரில், பழமை வாய்ந்த துர்க்கை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் ஆடிப்பூரத்தையொட்டி, பால் அபிஷேக விழா நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா நேற்று நடந்தது.விழாவையொட்டி காலை 10;00 மணிக்கு உத்திரமேரூர் பஜார் வீதியில் உள்ள முத்து பிள்ளையார் கோவிலில் துவங்கி, 501 பெண் பக்தர்கள் விரதம் இருந்து ஒரே மாதிரியான சீருடை அணிந்து, தலையில் பால் குடங்களை சுமந்து மேள, வாத்தியம் மற்றும் தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாக வந்தனர். உத்திரமேரூர் பஜார் வீதி உள்ளிட்ட முக்கிய பிரதான வீதிகளின் வழியாக சென்று துர்கையம்மன் கோவிலை அடைந்து கருவறைக்குள் சென்று தாங்கள் கொண்டு வந்த பாலை, மூலவருக்கு தங்களது கைகளாலே பாலாபிஷேகம் செய்தனர். இதயடுத்து, அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி