| ADDED : பிப் 15, 2024 09:38 PM
ஸ்ரீபெரும்புதுார்:குன்றத்துார் ஒன்றியம், துண்டல் கழனி ஊராட்சியில், அரசு தொடக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளின் ஆண்டு விழா நடந்தது.மாவட்ட கல்வி அலுவலர்கள் செந்தில்குமார், நளினி, ஸ்ரீபெரும்புதுார் காங்., - எம்.எல்.ஏ., செல்வப்பெருந்தகை, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் மனோகரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.விழாவில், கலை, விளையாட்டு மற்றும் இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் திட்டங்களை பட்டியலிட்டு, பல்வேறு மன்ற போட்டிகளில் மாநில அளவில் வெற்றிபெறும் மாணவர்கள் வெளிநாட்டிற்கு சுற்றுலா அழைத்துச் செல்லும் முன்னோடி திட்டம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.நிகழ்ச்சியில், உயர்நிலைப் பள்ளியின் பொறுப்பு தலைமையாசிரியர் ரேச்சல், தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியர் தேவக்குமார், ஊராட்சி தலைவர் சுதாகர் உட்பட பலர் பங்கேற்றனர்.