உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குன்றத்துார் முருகன் கோவிலில் முதல்முறை பிரம்மோற்சவ விழா

குன்றத்துார் முருகன் கோவிலில் முதல்முறை பிரம்மோற்சவ விழா

குன்றத்துார் : குன்றத்துார் முருகன் கோவிலில் முதல்முறையாக, 10 நாள் பிரம்மோற்சவ விழா நாளை மறுதினம் கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது.குன்றத்துார் மலை மீது, பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. தமிழகத்தில் வடக்கு நோக்கி அமைந்துள்ள ஒரே முருகன் கோவில், இது மட்டுமே.இந்த கோவிலில் முதல் முறையாக, 10 நாள் பிரம்மோற்சவ விழா நடத்த, கோவில் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து, நாளை மறுதினம் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா துவங்குகிறது.தங்க மயில், பச்சை மயில், நாகம், யானை உள்ளிட்ட தினமும் ஒரு வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி, வீதி உலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.இது குறித்து, கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தாமரை கண்ணன் கூறியதாவது:முதல் முறையாக பிரம்மோற்சவம் விழா நடக்க உள்ளதால், பக்தர்கள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர். விழாவின் ஏழாம் நாள், தேர் திருவிழா நடக்க உள்ளது.இந்தாண்டு தனியார் மூலம், தேர் ஏற்பாடு செய்துள்ளோம். சொந்தமாக தேர் செய்யும் பணிகளும் விரைவில் துவங்க உள்ளன. பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை