உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / 128 ரயில் நிலையங்களில் ஜூலைக்குள் கேமரா நிறுவப்படும்

128 ரயில் நிலையங்களில் ஜூலைக்குள் கேமரா நிறுவப்படும்

சென்னை:''சென்னை ரயில் கோட்டத்தில், 128 ரயில் நிலையங்களில் 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தும் பணிகள் வரும் ஜூலைக்குள் முடியும்,'' என, சென்னை ரயில் கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர்கூறியதாவது:சென்னை ரயில் கோட்டத்திற்கு உட்பட்ட நிலையங்களை, தினமும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணியர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிதி ஆண்டில் இதுவரை, 3,236.56 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. இது, 4.7 சதவீதம் அதிகமாகும்.வந்தே பாரத் ரயில்களுக்கு, பயணியரிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. நடப்பு நிதி ஆண்டில் மட்டும் 63.08 கோடி ரூபாய் மதிப்பில், ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.குறிப்பாக, அவசரமருத்துவ உதவி மையம், பேட்டரி வாகன வசதி, லிப்ட், எஸ்கலேட்டர்கள், நடைமேம்பாலங்கள், உணவகம் அமைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.அதேபோல், ரயில் பயணியரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், 128 ரயில் நிலையங்களிலும் 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. இப்பணிகள் வரும் ஜூலையில் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை