உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தரமற்ற முறையில் கட்டப்பட்டதால் சரிந்து விழுந்த மழைநீர் கால்வாய்

தரமற்ற முறையில் கட்டப்பட்டதால் சரிந்து விழுந்த மழைநீர் கால்வாய்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, 22வது வார்டுக்கு உட்பட்ட பூந்தோட்ட தெருவிற்கு, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் சிமென்ட் சாலையுடன், மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டது.இக்கால்வாய் வழியாக செல்லும் மழைநீர், அருந்ததியர்பாளையம் வழியாக, மஞ்சள் நீர் கால்வாயில் வெளியேறும்படி வழித்தடம் அமைக்கப்பட்டது.தரமற்ற முறையில் கால்வாய் கட்டுமான பணி நடந்ததால், சில ஆண்டுகளிலேயே கால்வாய் சரிந்து விழுந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதனால், மழைக்காலங்களில் மழைநீர் வெளியேற வழியில்லாமல் குடியிருப்பு பகுதிகளில் சூழும் நிலை உள்ளது. தற்போது, வீட்டு உபயோக கழிவுநீர் விடப்படுகிறது.மழைநீர் கால்வாய் சேதமடைந்த நிலையில், கழிவுநீர் வெளியேற வழியின்றிதேங்குவதால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது.எனவே, சரிந்து விழுந்துள்ள பழைய மழைநீர் வடிகால்வாயை அகற்றிவிட்டு, புதிதாக கால்வாய் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை