| ADDED : ஜன 24, 2024 09:58 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம், ஊரக வளர்ச்சி துறையில், திட்ட இயக்குனர், உதவி திட்ட இயக்குனர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள் ஆகியோர் உள்ளனர்.இவர்களுக்கு, துறை ரீதியாக சி.யூ.ஜி., மொபைல் எண் வழங்கப்பட்டுள்ளன.இது, பயன்படுத்தாமல், பில் தொகை செலுத்தாமல் இருந்தனர். இதனால், சில நேரங்களில், உரிய அலுவலர்களை தொடர்புகொள்ள முடியவில்லை என, பொது மக்கள் இடையே புகார் எழுந்துள்ளது.இந்த புகார்களை தவிர்க்கும் விதமாக, அனைத்து ஊரக வளர்ச்சி துறை ஊழியர்களுக்கு, முடங்கி கிடக்கும் சி.யூ.ஜி., எண்களை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து, ஊரக வளர்ச்சி துறையினர் கூறுகையில், 'அனைத்து அலுவலர்களின் சி.யூ.ஜி., எண்களுக்கு அந்தந்த அலுவலர்கள் பில் தொகை செலுத்திய பின், அனைத்து மொபைல் எண்களும் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.