| ADDED : டிச 25, 2025 05:58 AM
புஞ்சையரசந்தாங்கல்: டிச. 25--: மழைக்கு சேதமான புஞ்சையரசந்தாங்கல் சாலையில், நெடுஞ் சாலைத்துறையினர், 'பேட்ச் ஒர்க்' பணியை நேற்று மேற்கொண்டனர். காஞ்சிபுரத்தில் இருந்து அய்யங்கார்குளம், துாசி, கூழமந்தல், பெரு நகர், செய்யாறு, வந்தவாசி செல்லும் வாகனங்கள், காஞ்சிபுரம் ஒன்றியம், புஞ்சையரசந்தாங்கல் சாலை வழியாக சென்று வருகின்றன. வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இச்சாலையில், 'டிட்வா' புயல் காரணமாக, காஞ்சிபுரத்தில் கடந்த மாதம் பெய்த கனமழையால், புஞ்சையரசந்தாங்கல் சாலை, ஆங்காங்கே சேதமடைந்தது. இதனால், இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டது. சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, நெடுஞ்சாலைத்துறை சார்பில், புஞ்சையரசந்தாங்கலில் சேதமடைந்த சாலையை, 'பேட்ச் ஒர்க்' பணியாக நேற்று சீரமைத்தனர்.