உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சங்கரா பல்கலையில் மாலை நேர சமஸ்கிருத வகுப்பு துவக்கம்

சங்கரா பல்கலையில் மாலை நேர சமஸ்கிருத வகுப்பு துவக்கம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏனாத்துாரில் உள்ள சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹா வித்யாலயா பல்கலையில், மாலை நேர சமஸ்கிருத வகுப்பு துவங்கப்பட்டது.புதுடெல்லி கேந்திரியசமஸ்கிருத விஸ்வ வித்யாலயம், சம்ஸ்கிருத பல்கலையால் 'அஷ்டாதசீ' எனும் திட்டத்தின் வாயிலாக, மாலை நேர சமஸ்கிருத வகுப்பு துவங்கப்பட்டு உள்ளது.பல்கலை துணைவேந்தர்பேராசிரியர் ஸ்ரீநிவாசு, சமஸ்கிருத வகுப்பை துவக்கி வைத்து, சமஸ்கிருத மொழியின் தொன்மை மற்றும் அதன் சிறப்புகள் குறித்து மாணவர்களிடம் பேசினார்.இந்நிகழ்ச்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் முனைவர் தேவஜோதி ஜனா, இந்நிகழ்ச்சியின் குறிக்கோள் மற்றும் நடைமுறை குறித்து எடுத்துரைத்தார். சமஸ்கிருத துறை தலைவர் முனைவர் நவீன் வரவேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை