மேலும் செய்திகள்
21 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்
10 minutes ago
அங்கன்வாடி செல்லும் பாதை மண் கொட்டி சீரமைப்பு
13 minutes ago
உத்திரமேரூர்: மானாம்பதியில், 2.70 லட்சம் ரூபாய் செலவில் நுாலக கட்டடம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. உத்திரமேரூர் ஒன்றியம், மானாம்பதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே, நுாலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, அப்பகுதியைச் சேர்ந்தோர் தினமும் வந்து, புத்தகம் படித்துவிட்டு செல்கின்றனர். கடந்த 20 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட, நுாலக கட்டடம் பழுதடைந்து இருந்தது. இதனால், கூரையில் இருந்து அவ்வப்போது கான்கிரீட் பெயர்ந்து வந்தது. இதை புதுப்பிக்க வாசகர்கள், ஊராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, 2024 --- 25ம் நிதி ஆண்டில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 2.70 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதுப்பிக்கும் பணிகள் கடந்த மாதம் துவக்கப்பட்டது. தற்போது, நுாலக கட்டடம் புதுப்பிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு தயாராக உள்ளது. நுாலக கட்டடம், இந்த வாரத்தின் இறுதியில் பயன்பாட்டுக்கு வரும் என, மானாம்பதி ஊராட்சி தலைவர் ராதா தெரிவித்தார்.
10 minutes ago
13 minutes ago