உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மருத்துவ பரிசோதனை முகாம்

மருத்துவ பரிசோதனை முகாம்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாநகராட்சியில், தன்னலம் கருதாமல், இரவு, பகல் பாராமல் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு எலும்பு மூட்டு பரிசோதனை முகாம், காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோவில் தெருவில் உள்ள தனியார் மருந்தகத்தில் நேற்று நடந்தது.இதில், துாய்மை பணியாளர்களுக்கு, எலும்பு மூட்டு மற்றும் முதுகு தண்டு பிரிவு சிகிச்சை நிபுணர் டாக்டர் தினகரன், 3,000 ரூபாய் மதிப்புள்ள எலும்பு மூட்டு தேய்மானம், ஜவ்வு காயம், தசைப் பிடிப்பு மற்றும் நரம்பு வலி, முடக்கு வாதம், எலும்பு சத்து உள்ளிட்ட மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார்.மேலும், துப்புரவு பணியாளர்கள் உடல் சோர்வின்றி பணியாற்ற இலவச பிசியோதெரபி அளிக்கப்பட்டது.பொது மருத்துவர் சோனியா, துாய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்து, நோயின் தன்மைக்கேற்ப இலவசமாக மருந்து, மாத்திரை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை