மேலும் செய்திகள்
களக்காட்டூரில் பயணியர் நிழற்குடை அமைப்பு
12 minutes ago
வாலாஜாபாத் கிளை நுாலகம் முழு நாள் செயல்பட எதிர்பார்ப்பு
13 minutes ago
இலவசமாக மனு எழுதி தர ஆட்கள் நியமிக்க கோரிக்கை
14 minutes ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓரிக்கை மிலிட்டரி சாலையில், போக் குவரத்திற்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். சின்ன காஞ்சிபுரம் பெரியார் நகரில் இருந்து, தேனம்பாக்கம், ஓரிக்கை வழியாக செவிலிமேடு செல்லும் மிலிட்டரி சாலை உள்ளது. கனரக வாகனங்கள் அதிகம் செல்லும் புறவழிசாலையான இது, அகலம் குறைவாக உள்ளதால் தற்போது, விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், மிலிட்டரி சாலையை ஒட்டியுள்ள ஓரிக்கை, செவிலிமேடு பகுதியில் மாடு வளர்ப்போர், அவற்றை தங்கள் வீட்டில் கட்டி வைத்து பராமரிக்காமல், மேய்ச்சலுக்காக வெளியே அவிழ்த்து விடுகின்றனர். மேய்ச்சலுக்காக செல்லும் மாடுகள், ஓரிக்கை மிலிட்டரி சாலையை மறித்து நிற்பதோடு, குறுக்கும் நெடுக்குமாக மிரண்டு ஓடுவதால், பாதசாரி களும், இருசக்கர வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, ஓரிக்கை மிலிட்டரி சாலையில், போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து தொழுவத்தில் ஒப்படைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
12 minutes ago
13 minutes ago
14 minutes ago