|  ADDED : ஜன 20, 2024 11:07 PM 
                            
                            
                         
                         
                     
                        
                              
                           
                        
                          
                                                      
காஞ்சிபுரம், வாலாஜாபாத் அடுத்த திம்மராஜம்பேட்டை கிராமத்தில், ஹிந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில், பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.இக்கோவிலில், தைப்பூச தினத்தன்று தெப்போற்சவ திருவிழா நடைபெறும். அப்போது, அம்பாளுடன் ராமலிங்கேஸ்வரர் தாங்கி பிச்சை நாயக்கன் குளத்தில், தெப்பலில் எழுந்தருளி ஐந்து முறை வலம் வருவார். நடப்பாண்டு, தைப்பூச தினத்தன்று தெப்போற்சவம், வரும் 25ம் தேதி இரவு 7:00 மணிக்கு நடைபெற உள்ளது.இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் மற்றும் திம்மராஜம்பேட்டை, தாங்கி ஆகிய கிராமத்தினர் செய்து வருகின்றனர்.